வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் தினமும் 600 லிட்டர் ஆக்சிஜனை கிரகின்றான், இந்த அளவு ஆக்சிஜனை இரண்டு மரங்கள் நமக்கு அளிக்கிறது.
இன்று ஆக்சிஜனுக்காக ஏங்கி பல லட்சங்கள் செலவு செய்து சிலிண்டர்களில் அடக்கப்பட்ட ஆக்சிஜனை உயிர் போராட்டத்திற்காக மருத்துவமனைகளில் பெறவேண்டிய சூழல் எழுந்துள்ளது , இயற்கை சூறையாடிய மனிதனின் விளைவுகளுக்கு பதிலடியாக இயற்கை மனிதனை சூறையாடி வருகிறது.
இந்நிலையில், மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் வல்லநாடு சித்த மருத்துவ பிரிவு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சித்த மருத்துவ பிரிவு மருந்தாளுநர் வெங்கடேசன் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதில், பணியாளர்கள் வேம்பன், மேரி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.