தூத்துக்குடியில் மூத்த பத்திரிக்கையாளர் தெய்வத்திரு. டி.ஏ. காசி அவர்களின் 5வது ஆண்டு நினைவு நாள் மற்றும் கொரோன கால ஊரடங்கை முன்னிட்டும் பாரதி நகர் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கி சிறப்பித்தார்.
தூத்துக்குடியில் மூத்த பத்திரிக்கையாளர் தெய்வத்திரு. டி.ஏ. காசி அவர்களின் 5வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும், கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டும் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் நலச் சங்கம் மாவட்ட தலைவர் ராதா ஆனந்தராஜ் தலைமையில் சர்வ தேச உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் ராஜலெட்சுமி ராஜ்குமார் மற்றும் தெய்வத்திரு.காசி அவர்களின் குடும்பத்தார் இந்த கொரோனா காலத்தில் சிரமப்பட்டு வரும் பாரதி நகர் ஏழை, எளிய மக்கள் 30 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது :
கொரோன வைரஸ் 2வது அலை தீவிரமாக பரவி உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து வரும் 7ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த கால கட்டத்தில் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களுக்கு சிரமமாக இருக்கும். இருப்பினும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்தால்தான் இந்த ரைவரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டு, அதை ஒழிக்க முடியும்.
இப்போது வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை தூத்துக்குடி மாவட்ட மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள், ஒத்துழைப்பு கொடுத்துள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் கண்டிப்பாக மூக்கை நன்றாக மூடி முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விதிமுறைகளை கடைபிடித்தால்தான் இந்த கொரோனா வைரஸை முற்றிலுமாக அழிக்க முடியும் என்று சிறப்புரையாற்றினார்.
அதன்பின் பாரதி நகர் ஏழை, எளிய மக்கள் 30 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தெய்வத்திரு. டி.ஏ காசி அவர்களின் மகனும் பத்திரிக்கை யாளருமான ஆனந்தராஜ் உட்பட அவரது குடும்பத்தார், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தாளமுத்துநகர் உதவி ஆய்வாளர் மஹாராஜா, தனிப்பிரிவு தலைமைக் காவலர் முத்துராஜன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.