• vilasalnews@gmail.com

மதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு முக கவசம் வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு 50,000 இலவச முக கவசங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் துரை வையாபுரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் வழங்கினார்.

கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் முக்கிய பங்காற்றி வரும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுகிற மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோரின் பங்கு மிகப் பெரியது. மேலும் இந்த கொரோனா தடுப்பு பணிகளில் காவல் துறையைச் சார்ந்த பலரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிட தக்கது. 

ஆகவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்ட காவல்துறையினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 2 லட்சம் இலவச முகக் கவசங்கள் வழங்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 50,000 இலவச முககவசங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் துரை வையாபுரி வழங்கினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயக ரமேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம், வழக்கறிஞர் செங்குட்டுவன், இளைஞரணி நிர்வாகி பொம்முதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!

மூத்த பத்திரிக்கையாளர் டி.ஏ.காசி 5- ம் ஆண்டு நினைவு நாள்: ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை எஸ்பி., வழங்கினார்!

  • Share on