தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி மரியாதை செய்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், திமுக முன்னாள் தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் அரிசி, காய்கறி தொகுப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து மீளவிட்டான் லூசியா முதியோர் இல்லம், நேசக்கரங்கள் இல்லம், மடத்தூர் முதியோர் இல்லம், மாசிலாமணிபுரம் பாசகரங்கள் முதியோர் இல்லம் எம்பவர் அமைப்புகளுக்கும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளா மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாணவரணி துணைச் செயலாளர் பாலகுருசாமி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன்,
மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பகுதிசெயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், இசக்கிராஜா, துணை மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன்,
மாநகர ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மாநகர விவசாய தொழிலளர் நல அணி அமைப்பாளர் முத்துவேல், வட்டச் செயலாளர்கள் நாராயணன், சேகர், சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ஜான்சி ராணி, செந்தில் குமார், ஜெபசிங், தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, திமுகவை சேர்ந்த சுப்பையா, பிரபாகர், கருணா, அல்பர்ட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.