• vilasalnews@gmail.com

எட்டயபுரத்தில் ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த வாகனங்கள் பறிமுதல்

  • Share on

எட்டயபுரத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றி திரிந்ததாக  25 இருசக்கர வாகனங்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஊரடங்கை மீறி தேவையின்றி பொதுவெளிகளில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்கு பதிவு, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

இருப்பினும் எட்டயபுரம் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் காவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காலை முதலே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது, உதவி ஆய்வாளர்கள் முத்துவிஜயன், பொன்ராஜ் மற்றும் காவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர்.

மேலும், உரிய காரணமின்றி வந்தவர்களிடம் இருந்து 25 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதே போல், முக கவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

  • Share on

ஆடுகள் திருடிய இருவர் கைது

105 வயது முதியவர் மரணம்!

  • Share on