தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆறாம்பண்ணை கிளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆறாம்பண்ணை கிளை சார்பில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து கபசுர குடிநீர் விநியோகம் வழங்குதல் மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம் ஆறாம்பண்ணை பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணை தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். கிளை தலைவர் அப்துல் ஹமீது வரவேறார்.
முகாமில், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இதில், பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல்காதர், ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிளை மாணவரணி அல்தாப் நன்றி கூறினார்.