தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக செந்தில் ராஜ் பொறுப்பேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை ஆட்சியராகவும் ,தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக தேசிய சுகாதார திட்ட இயக்குனர் ஆக இருந்த செந்தில்ராஜ் யையும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில் ராஜ் இன்று (15.11.2020) காலை பொறுப்பேற்றார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.இவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 26 வது ஆட்சியர் ஆகும்.
அமைச்சரிடம் வாழ்த்து
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செ.கடம்பூர் ராஜூ வை, தூத்துக்குடி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்ராஜ் மரியாதை நிமித்தமாக , பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின் போது ,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் ,சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.