• vilasalnews@gmail.com

முத்தையாபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

  • Share on

தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் தோப்புதெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை டாக்டர் சந்தனமாரி தொடங்கி வைத்தார். 

முகாமில் முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்னதாக தெற்கு மண்டலம் இந்து முன்னணி சார்பில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் மாதவன், ஆறுமுகம், மாநில நிர்வாகிகள் மாயக்கூத்தன், இசக்கிமுத்து, குமார் மற்றும் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

ஆன் லைன் ரம்மி குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுரை

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குடும்பத்தினருக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆறுதல்!

  • Share on