• vilasalnews@gmail.com

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் : எஸ்பி., வழங்கினார்!

  • Share on

தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.

ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி ராஜ் மஹாலில் வைத்து இன்று (01.06.2021) மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.


அப்போது அவர் பேசுகையில் :

பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் அரசு நடைமுறைபடுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகி நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சாந்தி ஆகியோர் செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

  • Share on

பசுவந்தனை அருகே மணல் கடத்தல் - 4 பேர் கைது : ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்!

ஆன் லைன் ரம்மி குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுரை

  • Share on