பசுவந்தனை அருகே சட்டவிரோதமாக மண் திருடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஜேசிபி மற்றும் டிராக்டர் வாகனங்கல் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை உதவி ஆய்வாளர் சீதாராமன் தலைமையிலான காவலர்கள் ரோந்து சென்றபோது, புங்கவர்நத்தம் கிராமத்தில் கொண்டையம்மாள் கோவில் அருகே உள்ள வரத்து கால்வாயில் எவ்வித அனுமதியும் இன்றி, ஜேசிபி மூலம் டிராக்டரில் சரள் மணல் அள்ளிக் காெண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஜேசிபி எந்திரத்திரம் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் மணல் திருடியதாக ஜேசிபி டிரைவரான, சோழபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மகேஸ்வரன் (20), டிராக்டர் டிரைவர் தொட்டம்பட்டி காலனி, கிழக்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாடசாமி (40), ஜேசிபி உரிமையாளர் சோழபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் நவநீத கிருஷ்ணன் (30), மற்றும் டிராக்டர் உரிமையாளர் புங்கவர்நத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த செளந்திரபாண்டியன் மகன் நடராஜன் (56) ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் சித்ரகலா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.