• vilasalnews@gmail.com

ஆயுதத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல் : ஒருவர் கைது!

  • Share on

கோவில்பட்டியில் அரிவாள் ஆயுதத்தை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை கைது  கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டான் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன் (45), இவர் நேற்று மதியம் கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் சாலையில் நடந்து சென்றபோது, அவரை 3பேர் வழிமறித்து அரிவாள் ஆயுதத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 

இதுகுறித்து முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் சபாபதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக, கோவிபட்டி போஸ் நகரைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (27) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் வீடு இடிந்து இளம்பெண் பலி

பசுவந்தனை அருகே மணல் கடத்தல் - 4 பேர் கைது : ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்!

  • Share on