• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வீடு இடிந்து இளம்பெண் பலி

  • Share on

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்து இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ராஜமுருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். இவரது மகள் பரமேஸ்வரி (22), பிஇ முடித்துள்ளார். மேலும், அந்தோணியார் புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். மகன் சுந்தர் (21) கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மேற்கூரை கான்கிரீட்  திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சகோதரர் சுந்தர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வீடு இடிந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share on

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

ஆயுதத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல் : ஒருவர் கைது!

  • Share on