• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

  • Share on

காற்றாலை, சோலார் மூலம் மின் உற்பத்தி அதிகமாகி வருவதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்களில்  மின் உற்பத்தி அரசு உத்தரவு படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி வீதம், 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் காற்றாலை, சோலார் மின் திட்டம் மூலம் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி இருப்பதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்களில்  840 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கு தற்போது 4 யூனிட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஐந்தாவது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பிடிஓ திடீர் மாற்றம்

தூத்துக்குடியில் வீடு இடிந்து இளம்பெண் பலி

  • Share on