• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பிடிஓ திடீர் மாற்றம்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பிடிஓ திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.டி.ஓ., மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் ஏழு பி.டி.ஓ.,க்களை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, உடன்குடி கிராம ஊராட்சி பி.டி.ஓ., கருப்பசாமி ஆழ்வார்திருநகரி கிராம ஊராட்சிக்கும்,  ஆழ்வார்திருநகரி கிராம ஊராட்சி பி.டி.ஓ., பாலசுப்பிர மணியன் கோவில்பட்டி வட்டார ஊராட்சிக்கும், ஓட்டப்பிடாரம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., சிவராஜன் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பி.டி.ஓ.,வாகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பி.டி.ஓ., பொற்செழியன் உடன்குடி கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், கோவில்பட்டி வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வெங்கடாசலம் ஓட்டப்பிடாரம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், திருச்செந்தூர் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., நாகராஜன் உடன்குடி வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், உடன்குடி வட்டார ஊராட்சி பி.டி.ஓ., ராணி திருச்செந்தூர் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Share on

சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

  • Share on