• vilasalnews@gmail.com

சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது!

  • Share on

எப்போதும் வென்றான் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கருப்பன் மகன் கிருஷ்ணன் (65) என்பவர் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மேற்படி சிறுமியின் தாயார் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மீராள்பானுவிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் மீராள்பானு வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரி கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

விரைந்து நடவடிக்கை எடுத்த விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராள்பானு மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  பாராட்டினார்.

  • Share on

கன்னடியன் கால்வாய் திட்டப்பணி விரைந்து முடிக்க நடவடிக்கை- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பிடிஓ திடீர் மாற்றம்

  • Share on