• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பெயருடன் ரத்தவகை குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தும் காவலர்!

  • Share on

தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தனது சீருடையில் பெயருடன் ரத்தவகை குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படும் செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் ராமநாதன். இவர் தனது காவலர் சீருடையில் தனது பெயர் ராமநாதன் என்பதுடன் O+ என்கிற தனது ரத்த வகையையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமார் அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு டீ வழங்கினார்.

அப்போது ஏட்டு ராமநாதன் சட்டையில் பெயருடன் ரத்தவகை குறிப்பிட்டுள்ளதை பார்த்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவரை பாராட்டினார். மேலும், இது நல்லதுதான். விபத்து எப்போது யாருக்கு நடக்கும் என தெரியாது பெயருடன் போலீசார் ரத்த வகையை குறித்து இருந்தால் விபத்து நேரங்களில் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு நல்ல விழிப்புணர்வுக்கான அடையாளம் என தெரிவித்தார்.

ராமநாதன் கூறுகையில், ஆண்டிற்கு 3 முறை ரத்த தானம் செய்வேன். ரத்த தானம் செய்வதால் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும் என்றார்.

  • Share on

கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய காவலர்கள்!

தூத்துக்குடியில் விபத்தில் இறந்த உதவி ஆய்வாளர் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்

  • Share on