விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு இன்று (31.5.2021) பணிக்கு வந்த காவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுபடி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பழங்கள் மற்றும் ஊட்டசத்து பொருள்கள் வழங்கி வாழ்த்துக்கள் கூறி வரவேற்றார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-ம்அலை பரவிவரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காக்கும் முன்களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கு முக்கியம் வாய்ந்தாக உள்ளது.
இந்த நிலையில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்த காவலர்கள் 14 பேருக்கு பழங்கள் மற்றும் ஊட்டசத்து பொருள்கள் வழங்கி காவலர்கள் மன தைரியத்துடன் பாதுகாப்புடனும் பணியாற்ற வாழ்த்துக்கள் கூறி வரவேற்றார்.