தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொங்கராயக்குறிச்சி கிளை சார்பில் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்திடும் பணியில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயக்குறிச்சி கிளை சார்பில் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து கபசுரக் குடிநீர் ஊர் முழுவதும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான தொடக்க நிகழ்விற்கு, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் தமீம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். கிளைத் தலைவர் ருசிஇஸ்மாயில் வரவேற்றார்.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் அன்னராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினர்.
இதில், பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல்சலாம், கவுன்சிலர் மைமூனா அப்து கரீம், மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிளை மாணவரணி செயலாளர் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார்.