• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி இடத்தில் அத்துமீறி பதாகை - வழக்கு பதிவு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிதம்பரநகர் மார்க்கெட் இடிக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி பதாகை வைத்தவர்கள் மீது மாநகராட்சி உதவி ஆணையர் அளித்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் டீக்கடை, ஓட்டல், மீன் மற்றும் இறைச்சி கடை, மண் பானை கடை, பிரியாணி கடை உட்பட 60 க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட மார்க்கெட் இருந்தது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வந்தது.

இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி மூலம் புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. எனவே மாநகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டில் உள்ள வியாபாரி களை கடைகளை காலி செய்வதற்கு வலியுறுத்தி வந்தது. மேலும் இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் ஒருபுறம் நடந்தது.

இந்த நிலையில், கடந்த மே 12-ம் தேதி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் கடைகள் அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது

இந்நிலையில், சிதம்பர நகர் வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள் தூத்துக்குடி என்ற பெயரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடிக்கப்பட்ட சிதம்பரநகர் மார்க்கெட்  பகுதிகளில் அத்துமீறி  பதாகை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பதாகைகளை அங்கிருந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றினர். அதனைத் தொடர்ந்து, சிதம்பர நகர் வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள் தூத்துக்குடி என்ற பெயரில், அரசால்  அறிமுகப்படுத் தப்பட்ட திட்டபணிகளை சீர்குலைக்கும் விதமாகவும், அரசின் திட்டங்களுக்கு எதிராக பொதுமக்களை தவறான கண்ணோட்டத்தில் திசை திருப்பும் நோக்கிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் எண்ணத்திலும், உயர்நீதி மன்ற உத்தரவை வீறி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில்  பதாகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் வருவாய் ( பொ)  அலுவலரால் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பதாகை வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம்!

தாளமுத்துநகர் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறி தொகுப்பு : காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்!

  • Share on