தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் இன்று (30.05.2021) ரோந்து பணி மேற்கொண்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் பின்புறம் பகுதியில் வைத்து தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் டேனியல் (27) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை கைது செய்து அவரிடமிருந்து 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.