சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு ரூ.3000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (29.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி போல்டன்புரம் சமுதாய நலக் கூடத்தில் தூத்துக்குடியில் செல்சீனி காலனியைச் சேர்ந்த சூசை மகன் சந்தியாகு (52), போல்டன்புரத்தைச் சேர்ந்த சகாயம் மகன் திலீப்குமார் (39), பால்ராஜ் மகன் ஜேசுராஜ் (44) மற்றும் சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (43) ஆகியோர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் 4 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகளும், ரூபாய் 3000/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.