தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு இன்று ( 29.5.2021) தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் கொரோனா கால நிவாரணமாக 50 திருநங்கைகளுக்கு மதிய உணவு மற்றும் அரிசிப்பை போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
இதில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக் கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப் பாளர் கோபி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தெர்மல்நகர் காவல் ஆய்வாளர் சாந்தி, தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.