தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு நடைபெறும் காவல்துறை யினரால் நடத்தப்படும் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரி களுக்கு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமார் உத்தரவிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் முக்கிய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அவர்கள் ரோந்து சென்று, குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பிற்கு நேரடியாக சென்று, அங்கு நடைபெறும் வாகன சோதனையை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில் :
தூத்துக்குடி நகரத்தில் 22 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 64 இடங்களிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 24.05.2021 அன்று முதல் கடந்த 5 நாட்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 2020 இரு சக்கர வாகனங்கள், 34 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 21 ஆட்டோக்கள் ஆகியவை மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேலும் ஒரு வார காலம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலத்திற்கு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். இதன் மூலம் கொரோனா தொடர்பு சங்கிலியை தடுத்து விடலாம், இந்த ஒரு வார காலத்திற்கு பொது மக்கள் அரசுக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.