• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்காத கிராம ஊராட்சி பகுதிகள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 127 கிராம ஊராட்சி மன்ற பகுதிகளில் கொரோனா தொற்று இல்லை என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளன. மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் 127 கிராம ஊராட்சி மன்ற பகுதிகளில் கொரோனா தொற்றால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.

மேலும் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 159 பேரும், குமாரகிரியில் 112 பேரும், கூட்டுடன்காட்டில் 93 பேரும், வீரபாண்டியன்பட்டினத்தில் 53 பேரும், குலசேகரன்பட்டினத்தில் 239 பேரும், மெஞ்ஞானபுரத்தில் 102 பேரும், பரமன்குறிச்சியில் 77 பேரும், இனாம் மணியாச்சியில் 115 பேரும், பாண்டவர் மங்கலத்தில் 106 பேரும், இலுப்பையூரணியில் 66 பேரும், குளத்தூரில் 128 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 

ஊராட்சி மன்ற பகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 ஆயிரத்து 696 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத் தப்பட்டு உள்ளனர். 586 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும், 143 பேர் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கிராம ஊராட்சி பகுதி களில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். சிவகளை கிராம ஊராட்சியில் அதிகபட்சமாக 518 பேரும், புதியம்பு த்தூரில் 470 பேரும் தடுப்பூசிபோட்டு உள்ளனர். 403 பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 15 ஆயிரத்து 670 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

  • Share on

தூத்துக்குடியில் காய்கறிகளின் விலை இவ்வளவு தான்!

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

  • Share on