தூத்துக்குடியில் வேளாண்மை துறை மூலம் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்து இன்று விற்பனை செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் முழுமையாக மூடப்பட்டு உள்ளன. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
அப்போது காய்களின் விலையை கடுமையாக உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்தனர். இதனால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள்.
தற்போது காய்கறிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் காய்கறிகள் விலை அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் வேளாண்மை துறை மூலம் காய்கறிகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி இன்று ஒரு கிலோ நெல்லிக்காய் ரூ.75-க்கும், சாம்பல் பூசணி ரூ.15-க்கும், பாகற்காய் ரூ.65-க்கும், கத்தரிக்காய் ரூ.65-க்கும், அவரைக்காய் ரூ.65-க்கும், மிளகாய் ரூ.35-க்கும், கொத்தவரைக்காய் ரூ.45-க்கும், தேங்காய் ரூ.55-க்கும், சேம்பு ரூ.55-க்கும், முருங்கைக்காய் ரூ.45-க்கும், சேனை கிழங்கு ரூ.45-க்கும், கருணை கிழங்கு ரூ.65-க்கும், சிறுகிழங்கு ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.35-க்கும், தக்காளி ரூ.23-க்கும், பீன்ஸ் ரூ.86-க்கும், பீட்ரூட் ரூ.25-க்கும், கேரட் ரூ.40-க்கும், சவ்சவ் ரூ.25-க்கும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.