தூத்துக்குடியில் காவல்துறையில் புதிதாக தொடங்கப்பட்ட சேவைக்கான தனிப்பிரிவு மையத்தை நாடிய 50 பேருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு களை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
கொரோனா கால ஊரடங்கின் போது கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஏழை எளிய மக்கள், உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத்தேவை வேண்டு பவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் காவல்துறை யின் புதிய சேவைக்கான தனிப்பிரிவு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப் பாளர் இளங்கோவன் தலைமை யில் போலீசார் அடங்கிய தனிப் பிரிவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று துவக்கி வைத்து, பொதுமக்கள், தங்கள் உதவிக்கு தொடர்பு கொள்வதற் கான 95141 44100 என்ற செல்போன் எண்ணையும் அறிவித்திருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல முதியவர்கள், ஏழை, எளிய மக்கள் மேற்படி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளை பெற்று வருகின்றனர்.
அதே போன்று இன்று தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மனைவி ஜெயராணி என்பவர் தன்னுடைய வீட்டருகில் 16 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வறுமையில் கஷ்டப்படுவதாகவும், அவர்களுக்கு சமைத்து சாப்பிடுவதற்கு அத்தியவசியப் பொருட்கள் இல்லை என தெரிவித்திருந்தார். அதே போன்று தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்கள் தெரிவித்திருந்தனர்.
உடனடியாக அவர்களின் தேவைகளையறிந்து, அவர்களுக்கு உடனடியாக வேண்டிய நிவாரணப் பொருட்கள் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவனுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் அவர்களுக்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, வத்தல் பொடி, புளி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பை காவல்துறையின் சேவை மையத்தை நாடிய 1 மணி நேரத்தில் 50 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது :
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கொரோனா காலத்தில் யாரும் பசியில் கஷ்டப்பட்டார்கள் என்ற நிலை இருக்கக்கூடாது என்பதே தனது நோக்கம் என்றார்.
மேலும் உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக் கலாம், அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவத்துள்ளார்.