• vilasalnews@gmail.com

கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

  • Share on

தூத்துக்குடி சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ரமேஸ் பிளவர் மில்ஸ் எஸ்.எஸ்.எஸ். பவுண்டேசன் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையிலான வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி மருத்துவம னைகளுக்கு அனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ரமேஸ் பிளவர் மில்ஸ் எஸ்.எஸ்.எஸ். பவுண்டேசன் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையிலான வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தலைமையில் இன்று (27.05.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு சத்யா ஏஜென்சிஸ் சார்பில் நிறுவனர் சத்யா வழங்கிய மருத்துவ மற்றும் உதவி உபகரணங்களையும், ரமேஸ் பிளவர் மில்ஸ் எஸ்.எஸ்.எஸ். பவுண்டேசன் சார்பில் மஞ்சு சிங்வி, மகேந்திரராஜ் சிங்வி ஆகியோர் வழங்கிய மருத்துவ உபகரணங்க ளையும் பெற்று தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி மருத்துவமனைக ளுக்கு அனுப்பி வைத்தார்.


சத்யா நிறுவனத்தின் சார்பில் மாஸ்க் 1800, பிபி கிட் 1000, என் 95 மாஸ்க் 1500, கையுறைகள் 450 பாக்கெட், சாணிடைசர் 500 மி.லி 750 பாட்டில்கள், பல்ஸ் ஆக்சி மீட்டர் 150, பெட்சீட், தலையணை உறை 1450 செட், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய டிஸ்போஸ் பெட்சீட், தலையணை உறை 1000, 42 இன்ஞ் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் 3 எண்ணிக்கை என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களும், ரமேஸ் பிளவர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் எஸ்.எஸ்.எஸ். பவுண்டேசன் சார்பில் 10 ஆக்சிஜன் கான்சன்ரேட்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், ஆக்சிஜன் தலையணைகள் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களும் வழங்கப்பட்டது. 

இப்பொருட்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) தஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், சத்யா ஏஜென்சிஸ் நிறுவனர் சத்யா, கிறிஸ்டோபர், எஸ்.எஸ்.எஸ். பவுண்டேசன் சார்பில் மஞ்சு சிங்வி, மகேந்திரராஜ் சிங்வி, சுமித்ஸ்ரீமால் சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

ரூ.8 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சேவைக்கான தனிப்பிரிவு : 50 பேருக்கு நிவாரண உதவி

  • Share on