• vilasalnews@gmail.com

ரூ.8 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

  • Share on

எப்போதுவென்றான் அருகே சிவஞானபுரத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதுவென்றான் அருகே சிவஞானபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திந்த சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (42) என்பவரை போலீசார் கைது செய்து, ரூபாய் 8,00,000- மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவர் ஏற்கனவே இது போன்று 2 புகையிலை பொருட்கள் சம்மந்தப்பட்ட வழக்கில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்படி எதிரியை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :

கடந்த 4 ½ மாதத்தில் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை செய்ததற்காகவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரை 83 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 103 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து ள்ளார். இந்த வருடம் மட்டும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்திருந்த வர்கள் என 156 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 

இதில் 4 பேர் புகையிலை வழக்கில் ஈடுபட்டவர்களும், 4 பேர் கஞ்சா வழக்கில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா கால ஊரடங்கில் கடந்த 3 நாட்களில் மட்டும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களின் 1420 இரு சக்கர வாகனங்களும், 24 ஆட்டோக்களும், 5 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் தயவு செய்து இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையில்லாமல் வீட்டு விட்டு வெளியே வரவேண்டாம். கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைய ஆரம்பித்துள்ளது. 

அதனால் உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை எளிதாக கட்டுப்படுத்திவிடலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப் பாளர் கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி உரத்தொழிற்சாலை முன்பு டிரைவர்கள் திடீர் மறியல் போராட்டம்

கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

  • Share on