• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இருவர் கைது

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலை உதவி ஆய்வாளர் சிவக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில், கோரம்பள்ளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (வயது 21), லெவிஞ்சிபுரம் 1-வது தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (20) ஆகியோர் பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார்களாம்.

உடனடியாக போலீசார் சுரேஷ், மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, பைக்கை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் எவ்வளவு?

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் கைது

  • Share on