• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் எவ்வளவு?

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவானமருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவ சேவைகளை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்ட மருத்துவமனைகளுக்கு நிர்ணயிக் கப்பட்ட கோவிட்-19 சிகிச்சைக்கான தொகுப்பு வீதம், தற்போதுள்ள தொற்றுக்காலத்தில் மக்கள் நலன் காத்திடவும், கட்டணமில்லா சிகிச்சை வழங்கிடவும் திட்டப்பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவ மனைகளில் கீழ்கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிடப் பட்டுள்ளது.


மேற்கூறிய கட்டணம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இதர பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற விரும்புவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுது காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை காட்ட வேண்டும் மற்றும் மருத்துவ விருப்பப் படிவம் நிரப்பப்பட வேண்டும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற தேவையான ஆவணங்கள் பின்வறுமாறு:

1. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை

2. குடும்ப அட்டை

3. ஆதார் அட்டை

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாதா வர்கள் ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் வருமான சான்றிதழினை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் மட்டும் பெற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இயங்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து காப்பீட்டுத் திட்ட அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விபரம் அறிய விரும்புவர்கள் இலவச தொலைபேசி எண் 1800 425 3993 அல்லது தூத்துக்குடி மாவட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலரை 7373004970 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் மேலும் மேற்கண்ட மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை விபரங்களை அறிய இணையதள முகவரியில அறிந்து கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Remdesivir, Tocilizumab, Itolizumb போன்ற மருந்துகள் மற்றும்  D-Dimer, IL, LDH, Procalcitonin போன்ற பரிசோதனை களுக்கும் கூடுதல் கட்டணம் பயனாளிகளின் சார்பாக மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் பயனாளியிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது. பொது மக்களை பொறுத்தவரை மேற்கூறிய கட்டணம் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலோ முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப் பட்டாலே, 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு https://tncovidbeds.tnega.org என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


  • Share on

நான்காம் ஆண்டு நினைவு தினம் : பெரியசாமி நினைவிடத்தில் அஞ்சலி

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இருவர் கைது

  • Share on