தூத்துக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக முன்னாள் மாவட்ட செயலாளருமான பெரியசாமியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், குடும்பத்தினர், திமுக மற்றும் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக தொடர்ந்து 30 ஆண்டுகளாகவும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி, தென்மாவட்ட திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய என்.பெரியசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு மே 26ம்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள அவரது சொந்த இடத்தில் நினைவிடமும், அதில் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று ( 26.5.2021 ) அவரது நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் பெரியசாமியின் மனைவி எபனேசர் பெரியசாமி, என்பி. ராஜா, திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன், என்.பி.அசோக் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.