• vilasalnews@gmail.com

ஒரே நாளில் நடமாடும் கடைகள் மூலம் 13.42 டன் காய்கறிகள் விற்பனை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் 13.42 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக, ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரம் தளர்வு இல்லா முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்து உள்ளது.

இந்த ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொது மக்களின் இல்லங்களை தேடி சென்று நடமாடும் காய்கறி கடைகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போன்று பஞ்சாயத்து யூனியன்களில் 58 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை கடை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பஞ்சாயத்து பகுதிகளில் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் காய்கறி மற்றும் இறைச்சி விற்பனையாளர்கள் மூலம் மொத்தம் 632 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு காய்கறி, இறைச்சி உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேளாண்மை துறையின் மூலம் 29 வாகனங்களிலும், தோட்டக்கலை துறையின் மூலம் 45 வாகனங்களிலும், வேளாண்மை விற்பனைத்துறையின் மூலம் 5 வாகனங்களிலும் ஆக மொத்தம் 79 வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்களின் இல்லம் தேடி சென்று 13.42 டன் அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் இந்த சேவை தொடரும் என்று பொது மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Share on

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் காயல் நகர பொறுப்பாளர்கள் நியமனம் : மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

நான்காம் ஆண்டு நினைவு தினம் : பெரியசாமி நினைவிடத்தில் அஞ்சலி

  • Share on