தமிழகத்தில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 34,867 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18லட்சத்து 77ஆயிரத்து 211ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 404பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 20,872ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை கொரோனாவிலிருந்து 15,54,759பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் :
10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இக்கட்டான நிலை இருந்தது. ஆனால், முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை மறைக்கவில்லை. இன்னும் 2 நாட்களில் 10 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.