நேற்று மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெம்பூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எஸ்.ஐ. விநாயகம் தலைமையிலான போலீசார் நேற்று (24.05.2021) ரோந்து சென்ற போது வெம்பூர் சமுதாயக்கூடம் அருகே வெம்பூரைச் சேர்ந்த கந்தன் மகன் ராஜ் (32), அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் தங்கமாரியப்பன் (36), தங்கவேல் மகன் தயாளன் (42), சின்னகுருசாமி மகன் கணேசன் (46) மற்றும பெருமாள் மகன் பொன் பெருமாள் (31) ஆகிய 5 பேரும் பணத்திற்காக சட்டவிரோதமாக சீட்டுக் கட்டுகளை வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. ஆகவே போலீசார் மேற்படி 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய். 110/- மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.