தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்கிறார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மிகுதியாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசின் உத்தரவுப்படி மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல மருத்துவமனைகள், தனிமைப் படுத்தப்படும் மையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்கிறார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பொது சுகாதாரத்துறை மாநில இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோரும் வருகின்றனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ண,ன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.