தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோன தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நேற்று இதற்கான பணிகள் துவங்கியுள்ளது
கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் இதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி போடுவது மட்டும்தான் என்று அரசு மற்றும் மருத்துவத் துறையினர் மத்தியில் கூறப்படுகிறது.
இதனால் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட பெரிய அளவில் ஆதரவு இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்துக்குடி செயிண்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொருனா தடுப்பூசி போடும் பணியினை சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
மாவட்டத்திற்கு 26,500 தடுப்பூசிகள் வரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்கு செயிண்ட்மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கிராமப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது என்றார்.