• vilasalnews@gmail.com

நடமாடும் காய்கறி, பலசரக்கு பொருட்கள் விற்பனை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

  • Share on

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் மற்றும் பழங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, நடமாடும் காய்கறி, பலசரக்கு பொருட்கள் மற்றும் பழங்கள் விற்பனையை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

மே 24 ஆம் தேதியான இன்று முதல் மே 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலத்தில் காய்கறிகள், மளிகைக் கடைகள், பழக்கடைகள் இயங்காது.

இதனால், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் மற்றும் பழங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் மூலம் நடமாடும் காய்கறி, பலசரக்கு பொருட்கள் மற்றும் பழங்கள் விற்பனையை மேற்கொள்ள மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, நடமாடும் காய்கறி, பலசரக்கு பொருட்கள் மற்றும் பழங்கள் விற்பனை தொடக்க விழா,  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாநகர நகர் நல அலுவலர் வித்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ரவீசந்திரன், உதவி ஆணையர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், ராமசந்திரன், காமராஜ் காய்கனி மார்க்கெட் மேலாளர் நியூட்டன், உதவி மேலாளர் ரவி, மாநகர நகர் நல அலுவலர் வித்யா, சேகர், ராஜசேகர், பன்னை பசுமை காய்கறி கடை மேலாண்மை இயக்குநர் அந்தோணி பட்டுராஜ், கடை மேலாளர் ராஜதுரை, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பர்ட், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.



  • Share on

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு : ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்!

காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

  • Share on