தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொண்டு செல்ல இந்து முன்னணி சார்பில் இரண்டு தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா உள் நோயாளிகளுக்கு உதவிடும் பொருட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மருத்துவமனை வார்டுகளுக்கு உணவு வகைகளை கொண்டு செல்ல பயன்படும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு தள்ளு வண்டியினை இந்து முன்னணி மாநில பேச்சாளர் மாயக்கூத்தன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி பாலன், உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெபமணி ஆகியோரிடம் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமை தாங்கினார். முத்தையாபுரம் திவ்யா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த சுவாமிதாஸ் ஆகியோர் உதவி செய்து இருந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை மாநகர மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கி முத்துக்குமார் செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சரவணக்குமார், வெங்கடேஷ், சுடலை மணி, சுதாகர், சுடலை, சரண் பலர் கலந்து கொண்டார்கள்.