காயல்பட்டினத்தை சேர்ந்த நண்பர்கள் குழுவினர், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு மனித நேயத்தோடு இலவசமாக உணவு பொட்டலம் வழங்கிவருகின்றனர்.
கொரோணா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் சாலையோரம் உள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியோர்களுக்கு காயல்பட்டினத்தை சேர்ந்த நண்பர்கள் குழு சார்பாக காதர், ஷாஜஹான், அபுபக்கர் சித்திக் மற்றும் உமர் ஹோட்டல் உரிமையாளர் ஆகியோர் தினந்தோறும் உணவு பொட்டலம் வழங்கி வருகின்றனர்.
இவர்கள் முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி,குலசேகர பட்டினம்,வீரபாண்டிய பட்டினம்,காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் உணவு வழங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவர்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.