• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 372 வாகனங்கள் பறிமுதல், 470 பேர் மீது நடவடிக்கை

  • Share on

தூத்துக்குடி  மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று ஓரே நாளில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள்  470 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, 3 கார்கள், 5 ஆட்டோக்கள் உட்பட 372 வாகனங்கள் பறிமுதல் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

தூத்துக்குடி  மாவட்டத்தில் நேற்று (21.05.2021) ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள் 420 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 329 இருசக்கர வாகனங்கள், 5 ஆட்டோக்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும், தீங்கு விளைவிக்கும் வகையில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என 53 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுப்படி வழக்குகள் பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் 1 கார் மற்றும் 35 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தயவு செய்து தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளையும், நெறிமுறை களையும் கட்டாயம் பிடிக்குமாறும், தயவு செய்து யாரும் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே நடந்தோ, வாகனங்களிலிலோ சுற்றித்திரிய வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு!

ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு பொட்டலம் வழங்கி வரும் நண்பர்கள் குழு

  • Share on