• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொரோனா சிகிச்சை  மையத்தில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கொரோனா தீவிர தொற்று உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

லேசான தொற்று உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் இல்லாதவர்கள் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள், அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்,  தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொரோனா சிகிச்சை  மையத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இன்று ( 22.5.2021) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


பின்னர், கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவர்களிடமும், மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறை எவ்வாறு உள்ளது, தங்களுக்கு திருப்திகரமாக உள்ளதா என நோயாளிகளிடம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கேட்டறிந்தனர். அதன்பின்னர், அங்கு கொரோனா தொற்று நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த யோகா பயிற்சி சிகிச்சை முறையை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மருத்துவர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 3 - ஆம் ஆண்டு நினைவு தினம் : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி மரியாதை

தூத்துக்குடியில் 372 வாகனங்கள் பறிமுதல், 470 பேர் மீது நடவடிக்கை

  • Share on