• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் 1200 காவலர்கள் - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (21.05.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபிநபு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தற்போது கொரோனா பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் கூட்டம் கூடுவதற்கோ, அத்தியாவசியத் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 12 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 55 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கோபி, கார்த்திகேயன், இளங்கோவன், திருநெல்வேலி சீமைச்சாமி, கன்னியாகுமரி சுந்தரம், தென்காசி சுவாமிநாதன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கணேஷ், விளாத்திக்குளம் பிரகாஷ், மதுவிலக்குப்பிரிவு பாலாஜி, மணியாச்சி சங்கர், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, கோவில்பட்டி கலைக்கதிரவன், நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு முருகவேல், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு பாரத், அருப்புக்கோட்டை சகாயஜோஸ், தேனி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெபராஜ், ஆயுதப்படை சிசில், கோயம்புத்தூர் மத்திய குற்றப்பிரிவு பார்த்திபன், சென்னை வீமராஜ், கன்னியாகுமரி பாஸ்கரன் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

‘ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்’… 93 பேருக்கு நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு!

தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் 6பேர் மரணம் : புதிதாக 882பேருக்கு வைரஸ் பாதிப்பு!

  • Share on