தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு முதல்வர் பணி நியமன ஆணை வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணையை வழங்கினார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பணி நியமன ஆணை வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு ஏற்கனவே அரசு வேலை தரப்பட்ட நிலையில் கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.