எப்போதும் வென்றான் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி சிரமப்படும் ஏழை, எளியோருக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக மாணவரணி சார்பில், அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் ஆலோசனைப் படி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எப்போதும் வென்றான் உள்ளிட்ட பகுதியில் வசிக்கக்கூடிய, கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி சிரமப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக மாணவரணி சார்பில் அதன் ஒன்றியச் செயலாளர் ராஜகுமார், அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.