தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 1.30 லட்சம் மதிப்பிலான 5 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாழும் கலை அமைப்பினர் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலனிடம் வழங்னார்கள்.
கொரோனா நோய் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் சர்வதேச வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ 1.30 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாழும் கலை அமைப்பினர் சார்பில் சர்வதேச ஆசிரியரும், செய்தி தொடர்பாள ருமான மணிகண்டன், மாநில ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன், சில்வர் ஸ்டார் ஆகியோர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலனிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வாழும் கலை அமைப்பின் செய்தி தொடர்பாளர் மணிகண்டன் தெரிவித்ததாவது :
எங்கள் சர்வதேச வாழும் கலை அமைப்பின் சார்பில் நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1600 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 20 லட்சம் முகக் கவசங்கள், 50 வென்டிலெட்டர்கள் இலவசமாக வழங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக இன்று ( 19.5.2021 ) தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ 1.30 லட்சம் மதிப்பில் 5 லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை முதல்வர் டாக்டர் ரேவதி பாலனிடம் வழங்கி யுள்ளோம் என தெரிவித்தார்.