ஓட்டப்பிடாரத்தில் சட்டவிரோதமாக கள் விற்றவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று (18.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஓட்டப்பிடாரம் மேட்டு கண்மாய் பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் வடக்கு வாகைகுளத்தை சேர்ந்த காமராஜ் மகன் பெருமாள் (26) என்பவர் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 15 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டது.