• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

  • Share on

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அளவிலான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அளவிலான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் தூத்துக்குடி சத்யா மகாலில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  தலைமையில், மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  முன்னிலையில் இன்று (18.05.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது: 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நம்மில் பலருக்கும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். நமது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இந்த கொரோனாவிற்கு இறந்தும் உள்ளனர். தமிழக அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போராடி வரும் சூழ்நிலையில் வேறு வழியின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஒரே வழி நாம் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் வரக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். மிக முக்கியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேணடும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அது மிகவும் குறைவாகவே உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊர் பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு பல்வேறு சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களுக்கு சென்ற போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் இல்லாத நிலை உள்ளது. இங்கு வருகை தந்துள்ள ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்து வர வேண்டும். மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து காக்க அரசின் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார். 

இக்கூட்டத்தில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: 

தமிழகத்தை கொரோனா இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கும் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேணடும். இதன் அவசியத்தை வலியுறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேணடும் என்ற எண்ணத்தோடு தான் மக்கள் பிரதிநி திகளாகிய மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கின்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்று பொது மக்களிடையே தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்து சொல்லி கண்டிப்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை தடுப்பூசி போட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி போட்டால்தான் பொதுமக்களுக்கு வரும் கொரோனா நோயில் இருந்து அதிக அளவில் பாதிப்புகள் வராமல் அவர்களை காப்பாற்ற முடியும். நான் இதை கருத்தில் கொண்டுதான் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன். எனக்கு எவ்வித பாதிப்பு இல்லை. அரசு எடுக்கின்ற நடவடிக்கை அனைத்து கட்சியினரும் இணைந்து கொரோனாவை தடுப்பதற்கான குழுவினை  முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ளார்கள். இப்பணியில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் கட்சி பாகுபாடின்றி இணைந்து அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வை ஏறப்படுத்த வேண்டும். 

கொரோனா நோயை ஒழித்து நலமோடு வாழ மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒருங்கிணைந்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பேசினார். தொடர்ந்து அங்கு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதை பார்வையிட்டனர். 


இக்கூட்டத்தில் வட்டாட்சியர் ஜஸ்டின், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்தன், வட்டார மருத்துவ அலுவலர் ஜெனிபர் சத்யா, தூத்துக்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோவில்மணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அருண் குமார், முக்கிய பிரமுகர்கள் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர், ராமஜெயம், எஸ்.ஜே.ஜெகன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்கு ழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் மாநகரில் ஊரடங்கு கண்காணிப்பு பணி தீவிரம்!

லாரி உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி : டிரைவர் கைது

  • Share on