• vilasalnews@gmail.com

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் ஆணையர், டிஎஸ்பி ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்குள் மார்க்கெட் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் மார்க்கெட் பகுதிகளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

இதனையடுத்து, மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ், மற்றும் காவலர்கள் இன்று காய்கனி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மார்க்கெட்டில் சமூக இடை வெளியின்றி பொது மக்கள் அதிகமாக  கூடியதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மார்க்கெட்டை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்னன்,  தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்த ராஜன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டனர். 


முழு ஊரடங்கு காலத்தில் காய்கனி மற்றும் மளிகை சாமான்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மார்க்கெட்டில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் மட்டுமே காய்கனி மளிகை சாமான்களை வாங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். காய்கனி மார்க்கெட் பகுதிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் தூத்துக்குடி காமராஜ் மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலும், வஉசி மார்க்கெட் அதன் அருகே உள்ள வெளிப்புறத்திலும் இடமாற்றம் செய்ய அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.


  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு நேற்று ஆயிரத்தை தாண்டியது!

தூத்துக்குடியில் 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

  • Share on