கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் தமிழக முதல்வரிடம் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கே.வி. ராம மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கியானது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, வங்கியின் சார்பில், "முதல்வர் பொது நிவாரண நிதியாக" ரூ.3 கோடி வழங்கியுள்ளது,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, வங்கியின் தலைவர் ஏ.நிரஞ்சன் சங்கர், வங்கியின் இயக்குனர் டி.என்.நிரஞ்சன் கனி மற்றும் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் டி.ரமேஸ் ஆகியோர் ரூ.3 கோடிகளுக்கான காசோலையை வழங்கினர்.