• vilasalnews@gmail.com

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 41 பேருக்கு, எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.05.2021 அன்று 20 அட்டை பெட்டிகளில் 960 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட அண்ணாநகர் முருகன் கோவில் பகுதியில் 07.05.2021 அன்று அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சுமார் 4 கிலோ 50 கிராம் வைத்திருந்த எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை கைபற்றியும், 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (எ) கண்ணன் என்பவர் சட்டவிரோதமான விற்பனைக்காக தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1872 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தும், எதிரியை கைது செய்த தூத்துக்குடி வடபாகம் குற்ற பிரிவு ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், சிவக்குமார், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர்கள் சாமுவேல், மாணிக்கராஜ், மகாலிங்கம், காவலர்கள் செந்தில், திருமணி, முத்துபாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 06.05.2021 தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு அருகே ரோந்து பணியின்போது எதிரி அமலன் பச்சேக் என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும், அவரை கைது செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா, தலைமை காவலர் மோகன்ஜோதி, முதல் நிலை காவலர்கள் சொர்ணபாலன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 09.05.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கின் எதிரிகளை விரைந்து கைது செய்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர், முதல் நிலை காவலர்கள் செல்வின்ராஜா, சிவநேசமாணிக்கம், காவலர் சுஜேந்திரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 13.05.2021 அன்று திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தினசரி சந்தை பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 419 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, எதிரிகளை கைது செய்த திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் சுந்தரம், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமைகாவலர் ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 09.05.2021 அன்று குலசை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர்கள் மீது 18 வழக்குகள் பதிவு செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து 319 மதுபாட்டில்களை கைப்பற்றிய குலசை காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி அவர்களின் மெச்சதகுந்த பணிக்காகவும்,


கடந்த 13.05.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 2 எதிரிகளை கையும் களவுமாக பிடித்து ரூபாய் 2,20,000/- மதிப்பிலான் 46 ரெம்டெசிவர் மருந்துகளை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர் மாதவராஜா, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், கோவில்பட்டி கிழக்கு குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் உலகநாதன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் ஸ்ரீராம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 09.05.2021 அன்று கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட் எதிரியை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள தங்க நகைகளை கைப்பற்றிய கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி, உதவி ஆய்வாளர் காந்திமதி, தலைமை காவலர் சுப்புராஜ் முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், 7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ரூ.3 கோடி நிதியுதவி!!

  • Share on